ஓங்கி ஒலிக்கும் இந்துத்துவ இனவாதத்தின் பின்னணி என்ன ?
முஹம்மத் அன்சார் - நஸ்ப் லங்கா 

சுதந்திரப் போராட்ட காலத்துடன் இருந்து ஆரம்பித்த இனவாதத் தீ காலத்திற்கு காலம் சந்தர்ப்ப சூழ நிலைக்கு ஏற்ப இனவாதிகளால் மூட்டி விடப்படுகின்ற தீயை ஒரு சிறுபான்மை இனத்திற்கு எதிராக கொழுந்து விட்டு எரியும் வரை இனவாதிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயற்படுகின்ற ஒரு பொறிமுறையை காலம் காலமாக தொடர்ந்து ஒவ்வொரு வடிவிலும் நடைமுறைப்படுத்தி அதனால் தாங்கள் எதிர்பார்க்கும் இலக்கை அடைவதும்  இனவாதத்தின் அடிப்படை பண்பாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

               ஆக இனவாத தீயினை மூட்டப்படுகின்ற சந்தர்பங்களாக ஆட்சியும் அதிகாரமும் அதன் ஊடாக ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகளை அடக்கி ஒடுக்கிக்கொண்டு தன்னுடைய இனத்தின் உரிமைக்காகன ஆட்சி அதிகாரத்தையும் தன் இனத்தின் நன்மதிப்பையும் பெற்ற காவலனாக தன்னை முன்னிலைப் படுத்துவதையே இனவாத சக்திகள் தொடர்ந்தும் கையாளும் தந்திரமாக உள்ளது.

     மறு புறத்தில் நாட்டில் நடைபெறுகின்ற ஆட்சி அதிகாரத்தில் தன் இனத்தின் உரிமையும் சுதந்திரமும் புறக்கனிக்கப்படுகின்றது. என்ற ஒரு வகையான பிரம்மையை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி நாட்டின் ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக செயற்படுகின்ற இராஜதந்திர நகர்வுகளை பல சர்வதேச நாடுகளின் உதவிகளுடன் அரங்கேற்றி தங்களுடைய இலக்கை அடைந்து கொள்வதற்காகவும் இனவாதம் இன்று தலைவிரித்தாடுகின்றது. அந்த வகையில் வரலாறு நெடிகிலும் பௌத்த இனவாதம் மற்ற இரு சிறுபான்மைக்கு எதிராகவும்  இந்துத்துவ இனவாதம் அதற்கு அடுத்த சிறுபான்மைக்கு எதிராகவும் விரல் நீட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது.

     தற்போது அரங்கேற்பட்டு இருக்கும் இந்துத்துவ இனவாதம் அயல்நாடான இந்துத்துவ காவி ஆட்சியின் பின்னணியில் இருக்கும் ஆட்சியாளர்களினால் வட மாகாண முதலமைச்சர்இ அவரின் முக்கிய மாகாண அமைச்சர்களும் கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் சில இனவாத தலைவர்களும் இணைந்து மோடியின் காவி இந்துத்துவ ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன் மீண்டும் வட கிழக்கில் இந்துத்துவ இனவாத தீயை மூட்டி தங்களுடைய அரசியல் இலாபத்தை அடைந்து கொள்வதற்கும் இந்தியாவின் அரசியல் இராஜதந்திர நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படவும்  இந்துத்துவ இனவாதம்  ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. 

மோடியின் இந்துத்தவ சிந்தனையும் சிறுபான்மைக்கு எதிரான அடக்குமுறையையும் கொண்ட ஆட்சியின் ஆதரவுத் தளமாக இலங்கையிலும் தன்னுடைய கால்களை பதிக்க வேண்டும் என்ற மோடியின் இராஜதந்திர நகர்வுகளை நகர்த்துவதற்கான ஒரு ஊடகமாகவும் தமிழ் மக்களின் பெரும்பான்மை மக்களின் அரசியல் அதிகாரம் உள்ள சக்தியாகவும் காட்டிக்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமையையும் அதன் பலத்தையும்  உடைத்து தமிழ் மக்களை எப்போதும் ஒரு பீதியான சூழலில்தான் வாழவைப்பதையே வெற்றி காண்கிறார்கள்.  

ஆகவே தமிழர்களின் தீர்வுகள் இனத்துவத்தின் அடிப்படையில் தான் பெறப்பட வேண்டும் என்ற இனவாத கடும் போக்கு சிந்தனையை வளர்ப்பதில் கவனமாக செயற்பட்டு வெற்றி கண்டு வருகின்றது மோடியின் காவி ஆட்சி.

        பல சர்வதேச மேற்கத்தேய நாடுகளின் மறைமுகமான வழி காட்டலுடனும் சில நாடுகளின் அழுத்தங்களின் அதிகாரங்கள் இலங்கை அரசாட்சியில் தாக்கம் சொலுத்தி  நாட்டின் சிறுபான்மைக்கு ஆதரவான அரசியல்ரீதியான சில முன்மொழிவுகள் இடைக்கால அறிக்கைகள் யாப்பு சீர்திருத்த மாற்றங்கள் என இலங்கை அரசியன் இறைமைக்குள் இருந்து கொண்டு செயற்படுவதையும் மேற்கத்தேய நாடுகளின் தலையீட்டை விரும்பாத அயல் நாடான இந்தியாவின் நேரடி தலையீடுகளை நுழைப்பதற்கும் அரசியல் தீர்வு விடயங்களில் இந்தியாவின் அனுமதியுடன்தான் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதை எப்போதும் இந்தியா கவனம் சொலுத்துவதுபோல் நாடகமாடி வந்திருக்கின்றது.

. இந்த இரட்டை முகத்தை பல அனுபவங்களில் மூலமாக புரிந்து கொண்ட தமிழ் மித வாத முற்போக்கு தலைவர்கள் இந்தியாவின் தலையீட்டை சற்று நிராகரித்தன் மறு வடிவமாகவும் மிதவாத அரசியல் சக்திகளை பலவீனப்படுத்தி கடும்போக்கு இனவாத சக்திகளை இந்துத்துவ இனவாதத்தின் ஊடாக பலப்படுத்தும் சதி முயற்சியை மோடியின் இந்துத்துவ இனவாத அரசு மிகவும் இராஜதந்திரமாக முன்னெடுத்து வருகின்றது.

     இந்த சதியின் பின்னணியில் தான் அண்மையில் கிழக்கு மாகாண மட்டக்களப்பு பிரதேசங்களில் தமிழ் –முஸ்லிம் நல்உறவுக்கு எதிரான இனவாத மோதல்களை ஆரம்பித்து அதன் ஊடாக இரு சமூகத்தையும் தொடர்ந்து பகமையை ஏற்படுத்தி தமிழர்கள் தரப்பில் இருக்கின்ற போலி நியாயத்தை இந்துத்துவ இனவாதிகள் அப்பாவி தமிழ் மக்களை தவறாக வழிநடத்த தொடங்கி இருக்கிறார்கள்.

இது கிழக்கின் இனவாத தலைவர்களின் ஒரு புதிய வழிமுறையாக இனத்துவ யுத்தத்தை தொடங்கி இருப்பதற்கு பக்க பலமாக வடக்கின் முதலமைச்சரும் அவருடைய விசுவாசிகளான சில மாகாண அமைச்சர்களும் தமிழ் மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட சில கடும் போக்கு இனவாத தலைவர்களும் ஒன்றிணைந்து அரசியல் உரிமைப்போராட்டம் என்ற பெயரில் இந்துத்துவ இனவாத யுத்தத்தை சிறுபான்மையினருக்கு எதிராக தொடங்கியதன் விளைவுதான் கடந்த சில நாட்களாக சி.வி. விக்னேஸ்வரனால் வெளியிடப்படும் இனவாத கருத்துக்களும் அடுத்த சமூகத்தின் அரசியல் வாழ்வாதார உரிமைகளையும் அடக்கி ஒடுக்கும் கருத்துக்களையும் பல கசப்பான சந்தர்பங்களால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் –முஸ்லிம் உறவுகள் மீண்டும் நல் உறவுகளுடன் ஆரம்பித்துள்ள நிலையில் அந்த இரு சமூகங்களுக்கு இடையில் பகையை மூட்டி மீண்டும் இரு சமூகங்களையும் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக பார்கின்ற சந்தர்பத்தை மிகவும் இராஜதந்திரமாக முன்னெடுப்பதை தமிழ் கடும் போக்கு இந்துத்துவ இனவாதிகள் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆடத்தொடங்கி இருக்கிறார்கள். (அதன் பாதிப்புக்களை முஸ்லிம் சமூகம் மட்டக்களப்பு வவுனியா போன்ற பகுதியில் நேரடியாக பொருளாதார இழப்புகளையும் பாதிப்புக்களையும்  அனுபவித்திருக்கின்றது )

       ஆகவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்கள் நாங்களும் என்று கூறும் தமிழ் மிதவாத அரசியல் தலைமைகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது  இரு பெரும்பான்மைக் கட்சிகளுள் இணக்கப்பாட்டுடன் கூட்டாற்சி நடத்துகின்ற இந்த சந்தர்பத்தில் தமிழ் சமூகத்துடைய அரசியல் பிரச்சனைக்கான தீர்வுகள் தம் மக்களின் வாழ்வாதரா அடிப்படை பிரச்சனைகள் காணி விடயங்கள் என்று பல விடயங்களில் நியாயமான தீர்வுகள் எட்டப்படுகின்ற போதும் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைகளில் தங்கள் சமூகத்தின் அரசியல் தீர்வுப்பிரச்சனைகள் உள்வாங்கப்பட்டு அதற்கான கலந்துரையாடல்கள் பேச்சுக்கள் என்று பல முன்னெடுப்புகள் நடைபெறும் இத்தருணத்தில் இவ்வாறான இந்துத்துவ இனவாத கருத்துக்கள் செயற்பாடுகள் நீங்கள் எதிர்பார்க்கும் உங்கள் சமூகத்திற்கான எந்த அரசியல் ரீதியான தீர்வுகள் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த முடியாத அபாயமான நிலையை உருவாக்கும்.

 அதுமட்டுமல்ல வட- கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற சிங்கள சமூகத்தின் மத்தியில் இன்னும் நம்பிக்கை இல்லாத சந்தேகத்தையும் பகைமையையும் ஏற்படுத்துவதற்கு இந்த இந்துத்துவ இனவாதம் முக்கிய பங்களிப்பை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.என்பதை தமிழ் மித வாத அரசியல் தலைவர்களும் புரிந்து கொண்டு இந்த இந்துத்துவ இனவாதத்தின் ஆபத்தில் இருந்து தமிழ் சமூகத்தை மீற்பதற்கு முன்வர வேண்டும்.

     முஸ்லிம் அரசியல் தலைமைகளே ...

 நாங்களும் இணைந்து தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தினோம் என்று  மக்களுக்கு முன் வார்த்தைக்கு வார்த்தை கூவி பெருமைப்படும் நீங்கள் எல்லோரும் இந்த இந்துத்துவ இனவாதத்தின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன ? 

அதனால் வட- கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் என்ன ?

 நாம் ஆட்சிக்கு கொண்டு வந்த அரசாங்கத்தில் எம் சமூகத்திற்கான அரசியல் தீர்வு என்ன ? 

அமையப்போகும் புதிய அரசியல் யாப்பு மாற்றத்தில் எமக்கான பாதுகாப்பு என்ன போன்ற பல விடயங்கள் ஆழமாக கவனிக்கப்பட வேண்டிய தருணத்தில் இருந்து கொண்டும் தமிழர்களுடைய உரிமைகளுக்காக அவர்களின் குரல்கள் இனரீதியாக ஓங்கி ஒலிக்கின்ற போதும் அதனை கவனத்தில் கொள்ளாமல் தங்களுடைய வணிகதுக்காக  அரசியல் இருப்பை பாதுகாத்துக்கொள்வதையே நம் சமூகத்திற்கான தீர்வு என்ற மிதப்பில் இருந்தால் நாளை இந்துத்துவ இனவாதம் வட –கிழக்கு முஸ்லிம்களை அடக்கி ஆளும் என்பது மட்டும் தெளிவான உண்மையாகும்.