இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!பேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றானபோதும், அதனை சமூக நன்னடத்தை முறைகள் சிதையாது உபயோகிக்க வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பேச்சு சுதந்திரத்தினை சிறந்து தொடர்பாடலுக்காக மாத்திரமே உபயோகிப்பது மக்கள் அனைவரதும் பொறுப்பாகும். தனிப்பட்ட, முரண்பாடான, தனிநபரை அவமானப்படுத்தும் கருத்துக்களை முன்வைப்பதற்காக தொலைத்தொடர்பு அமைப்புக்களையோ, சமூக வலைத்தளங்களையோ (பேஸ்புக், டுவிட்டர்) குறுந்தகவல் அனுப்புதல் அல்லது தொலைபேசி உரையாடல் போன்றவற்றையோ மேற்கொள்ளக்கூடாது.

அநாகரீகமான, ஆபாசமான, வன்முறையை தூண்டும் விதத்திலான, பாலியல் முறைகேடான, அச்சுறுத்தும் விதமான மிகவும் எரிச்சலூட்டும், தொந்தரவூட்டும் தகவல்களை அனுப்புதல், தகுந்த காரணம் இன்றி தொலைபேசி அழைப்புகளை விடுத்தது எரிச்சலை அல்லது வேதனையை உருவாக்குவது குற்றங்களாகும்.

குற்றவாளி கண்டறியப்படும் பட்டசத்தில், இவற்றிற்கு தண்டப்பணம் செலுத்துவது, சிறைத்தண்டனை பெறுவது அல்லது இவ்விரு தண்டனைகளுக்கும் உள்ளாக நேரிடும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.