பெற்றோல் நெருக்கடிக்கு கூட்டுத்தாபனத்தின் பொடுபோக்கே காரணம்


பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் அதனை முகம்கொடுக்கத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது பெற்றோலியக் கூட்டுத்தாபம் பொடுபோக்குக் காட்டியுள்ளது என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் போதிய எரிபொருள் கையிருப்பில் இல்லாதபோதும் அதனை முகாமை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமையே தட்டுப்பாடு ஏற்பட பிரதான காரணம் எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பிரச்சினையை விசேட நிபுணர் ஒருவரை நியமித்து ஆராயுமாறும் குழு பரிந்துரை செய்துள்ளது.
இக்குழுவில் அமைச்சர்களான சரத் அமுனுகம, பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.