அமைச்சர் பைசர் முஸ்தபா சாய்நதமருதுக்கு விஜயம் செய்யவுள்ளார்(றியாஸ் இஸ்மாயில்)

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை பெறுவதற்கான முயற்சியில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை முன்னெடுத்து வருகின்றது.

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தி சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளரினால் ஒப்பமிடப்பட்ட 2017.11.06ம் திகதிய 039ம் இலக்க கடிதத்தலைப்பில் உள்ள மகஜர் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஊடாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்கு விலாசமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதற்கமைவாக   அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் பொதுச் செயலாளர் சஹீட் எம.றிஸ்மி முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் பொதுச் செயலாளர் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை அமைச்சில் சந்தித்து  சாய்ந்தமருது உளூராட்சி மன்றம் தொடர்பாக கலந்துரையாடி சாய்நதமருது ஜும்ஆப் பள்ளிவாசல் கோரிக்கையினை  ஒப்படைத்து இதற்கு பொருத்தமான தீர்வு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.இதற்கு அமைச்சர் தான் வெளிநாடு சென்று வந்ததன் பிற்பாடு இதுபற்றி செயற்படுவோம் சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் செல்ல வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை இது தொடர்பான முயற்சியில் இறங்கியுள்ளார்.எவர்கள் தொடர்பிலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் சாய்ந்தமருது மக்களுக்கு உள்ளூராட்சி மன்றம் பெறுவதற்கான நடவடிக்கைகளில் பேரவையினர் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி சாயந்தமருது உளூராட்சி மன்றம் தொடர்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரிடம் தொலைபேசியில் கதைத்த போது விரைவில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு சென்று அம்மக்களைச் சந்தித்து யாரும் பாதிப்பு அடையாத வகையில் செயற்படுகின்றேன் எனத் தெரிவித்திருந்தார்.

இதுவிடயமாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் நிருவாக சபைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை புதன்கிழமை(15.11.2017) பேரவையின் தேசிய தலைவர் தேசபந்து எம்.என்.எம்.நபீல் தலைமையில் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் சாய்ந்தமருதுக்கான உளூராட்சி மன்றத்தை பெறுவதற்கு எமது அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை முழுமையாக செயற்படுவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நாளை (17)வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பங்கேற்புடன் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சில் மாலை 2.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.