கிந்தோட்டை பூரணமாக நிம்மதியடைந்துள்ளது - அமைச்சர் சாகல ரத்னாயக்க தகவல்கிந்தோட்டை பிரதேசம் தந்பொழுது முழுமையாக பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பிரதேசத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க எமது செய்திப்பிரிவுக்கு சிறப்பு விளக்கமளித்தார்,

நேற்று இடம்பெற்ற கலவரம் மிகுந்த கவலை அளிப்பதாகவும் இதுபோன்றதொரு விடயம் மீள இடம்பெறமாட்டாது எனவும் குறிப்பிட்ட அமைச்சர், வீண் வதந்திகள் பரப்புவர்களுக்கு எதிராக பொலிஸ் தகுந்த நடவடிக்கை எடுக்கும் குறிப்பிட்டார்.