ஆவா குழுவோடு தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் இளைஞன் கைதாம்!!யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவுடன் தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

22 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து அந்த குழுவின் நோக்கம் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானத்தை செலுத்தியுள்ளனர்.

ஆவா குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 22 வயதுடைய இக்ராம் என்பவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
ஆவா குழுவுக்கு தொடர்புடைய முஸ்லிம் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திவயின மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.