றிஷாத் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு


2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 188,189 ஆம் பிரிவுகளில் முறையே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான நிதி, மன்னார் மாவட்டத்திற்கான பிரதான பஸ் நிலையத்திற்கான நிதி ஆகியன அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கின்றமைக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தெரிவித்தார்.
குறித்த தவறு திருத்தப்பட்டாக வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் இந்த விடையம் தொடர்பாக எழுத்து மூலமாக கையளிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து எழுத்து மூலமான கோரிக்கையை ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளதாகவும் சார்ள்ஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.