சவூதியில் வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் உபயோகித்தால் கடுமையான தண்டனைஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

சவூதியில் அரேபியாவில் வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் உபயோகித்தால் போக்குவரத்து ரகசிய கேமரா மூலம் சிக்குபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

சவூதி போக்குவரத்துத்துறை தற்போது கடுமையான சட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. அதில் ஒன்று வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் உபயோகித்தல். இதனாலேயே அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக போக்குவரத்து உயர் அதிகரி முஹம்மது அல் பசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் 14 சதவீத விபத்துக்கள் வாகன ஓட்டிகள் மொபைல் போன் உபயோகிப்பதாலேயே என்று புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன.
எனவே இனி வீதிகளில் வைக்கப்பட்டிருக்கும் ரகசிய கேமரா மூலம் வாகன ஓட்டிகள்மொபைல் போன் உபயோகித்ல், செல்ஃபி எடுத்தல் உள்ளிட்ட தவறுகளுக்கு கடும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

மேலும் முன் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் உபயோகப்படுத்த வேண்டும் என்ற சட்டமும் ஏற்கனவே அமுலில் உள்ளது.