அக்கரைப்பற்று உடையார் வீதியை கவனிக்க யாருமில்லையா? (Photos)முஹம்மட் நியாஸ் 

அக்ரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட உடையார் வீதி குன்றும் குளியுமாக கடந்த அரசின் காலத்தில் இருந்து காணப்படுகிறது, அனால் கடந்த அரசின் அமைச்சர் கூட இந்த வீதியை கவனிக்கவில்லை ஆனாலும் நல்லாட்சி அரசின் முக்கியஸ்தர்களும் இதனை கண்டு கொள்ளவில்லை, அதிகாரிகளாவது இதனை கண்டு கொள்ளுமாறு பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மழைக்காலம் என்பதால் இவ்வீதி மிகுந்த பாதிப்படைந்து காணப்பட்டு வெள்ளம் தேங்கிநிற்கிறது, இந்த பாதையால் செல்கின்றவர்கள் மற்றும் பகுதி வாழ் மக்களுக்கு மிகுந்த கஸ்டமளிக்கிறது, குறித்த அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்