விடுதலை புலிகளின் பொருட்களை மீட்க முயற்சித்த 11 பேர்க்கு நடந்தது என்ன?


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி காட்டுப்பகுதியில் யுத்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பணம் மற்றும் தங்கங்களை தோண்டி எடுப்பதற்கு முயற்சி செய்த 11 பேர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாத்தறை, வெல்லம்பிட்டிய, கொட்டஹேன, மாக்கந்துர, கொட்டவை, கம்பளை, மற்றும் வெளிவேரிய ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...