ஜெரூசலம் விவகாரம் ; ட்ரம்ப் எதிராக 128 நாடுகள் - ஐ.நா. வில் தீர்மானம்


ஜெரூசலத்தை இஸ்ரவேலின் தலைநகராக ஏற்றுக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அறிவிப்பை வாபஸ் பெறுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 128 நாடுகள் வாக்களித்துள்ளன.

இலங்கையும் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. அமெரிக்க உட்பட 9 நாடுகள் மாத்திரமே இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன.
35 நாடுகள் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டுள்ளன.
அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாகவும், நிதி உதவிகள் வழங்கும் விடயத்தில் இந்நாடுகளுடன் கண்டிப்பாக நடந்து கொள்ளப் போவதாகவும் அமெரிக்க சிவப்பு சமிக்ஞை வழங்கியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு சபையில் நடைபெற்ற வாக்களிப்பின் பின்னர் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்ப, ஐக்கிய நாடுகளின் விசேட மற்றும் அவசர மகா சபையை கூட்டியுள்ளதுடன், இதன்போது அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் கூறியுள்ளன. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...