16 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ்புக் தொடங்க, பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டும் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

16 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ்புக் தொடங்க, பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டும்

Share This


16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்க தங்கள் பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற சட்டம் விரைவில்   பிரான்ஸில்  வரவுள்ளது.

இது தொடர்பாக ஒப்புதல் தரப்பட்ட மசோதா அறிக்கையை நாட்டின் நீதித்துறை அமைச்சர் நிகோல் பெலொபெட் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கினார்.

இதையடுத்து மசோதாவானது சட்டமாக இயற்றப்படுவதற்கு ஏதுவாக பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

அனைத்து தரவு நிறுவனங்களும், பயனாளர்களும் எள&#300#3007;தாக அணுகும் வகையில் மசோதா ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிகோல் கூறுகையில், இனி 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்குவதற்கு முன்னர் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் அனுமதி பெற்றுவிட்டோம் என குறிக்கும் வகையிலான கணக்கு படிவத்தில் டிக் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே நாட்டின் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்துவது தடை செய்யப்படும் என சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE