இலங்கையில் 1,80,988 டெங்கு நோயாளர்கள்!



இவ்வருடத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 988 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகப்படியான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில் , அது நூற்றுக்கு 41.57 சதவீதமாகும். ஜூன் மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் , கடந்த நவம்பர் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 670 என குறிப்பிடப்பட்டுள்ளது.