2018ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதிக்கு முதல் தேர்தல் நடைபெறும்2018ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முந்திய நாள் ஒன்றில் உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்நாடு முழுவதிலும் 341 உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஒரே தடவையில் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வேட்பு மனு தாக்கல் செய்யும் காலப்பகுதியில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூட்டங்களை மேற்கொள்பவர்கள், பேரணிகளை நடத்துபவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தலின்போது முறைகேடுகள் இடம்பெறுமாக இருந்தால், அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.