அறிவித்தலை மீறி கடலுக்கு சென்ற 25 மீனவர்கள் ; நடந்தது என்ன?


வங்காள விரிகுடாவில் கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இன்றும் தொடர்வதால் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலை மீறி கடலுக்கு சென்ற 25 மீனவர்கள் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்த அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தகப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட மீனவர்கள் மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜே.அலெக்ஸ் மூலம் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.