Dec 15, 2017

இலங்கையில் 30.000 போலி வைத்தியர்கள்!!!



நாடாளாவிய ரீதியில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் காணப்படுகின்றனர் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். சுகாதார அமைச்சு இன்றைய தினம் -15- வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
போலி வைத்தியர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, குறித்த நடவடிக்கைக்கு காவல் துறையினரின் உதவியை நாடாவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடள் நாடளாவிய ரீதியில் சுமார் 15 ஆயிரம் உத்தியோகப்பூர்வ வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.
இவ்வாறு கடமையறாற்றும் உத்தியோகப்பூர்வ வைததியர்கள் பதிவுகளை மேற்கொள்வார்களாயின் போலி வைத்தியர்களை இலகுவாக கண்டறிய முடியும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post