4 மாத குழந்தைக்கு நடந்த சோகம்; பசறையில் சம்பவம்4 மாத குழந்தையொன்று தாய்ப்பால் அருந்திய பின்னர் உயிரிழந்த சம்பவமொன்று பசறையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தைக்கு தாய் பாலூட்டியுள்ள நிலையில் , குழந்தையின் தொண்டையில் பால் அடைத்துள்ளதை தொடர்ந்து குழந்தை உடனடியாக பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குழந்தையின் சடலம் தற்போது பசறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பசறை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 மாத குழந்தைக்கு நடந்த சோகம்; பசறையில் சம்பவம் 4 மாத குழந்தைக்கு நடந்த சோகம்; பசறையில் சம்பவம் Reviewed by NEWS on December 21, 2017 Rating: 5