நில அதிர்வில் ஒருவர் பலி - 54 பேர் காயம் # ஈரான்ஈரானின் டெஹேரான் தலைநகரில் இன்று ஏற்பட்ட நிலஅதிர்வின் பின்னர் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நபரொருவர் உயிரிழந்துள்ளார். ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வில் மேலும் 56 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 நிலஅதிர்வு ஏற்படும் போது கட்டித்தில் இருந்து வௌியேற முயற்சித்துள்ளதால் இவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 20ம் திகதி ஈரானில் ஏற்பட்ட நிலஅதிர்வில் இரண்டு பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.