மைத்திரி ஒருசாமானா? என்று கேட்ட அதாஉல்லா இன்று மைத்திரியுடன் - நசீர்!ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன ஒருசாமானா? என்று கடந்த தேர்தல்காலத்தில் பேசிய அதாஉல்லா இன்று அவருடன் ஒட்டி உறவாடுகிறார் மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் மாகாண சபை அமைச்சர் நசீர் குறிப்பிட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை வேட்பாளர் உவைஸ் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டார் மேலும் பேசிய அவர்,

மைத்ரிபால சிறீசேனவுக்கு அதிகம் கிண்டலிடத்த அதாஉல்லா இன்று அவரின் காலைப்பிடிக்கின்ற நிலமை வந்துள்ளது, பள்ளிவாசல் உடைக்கப்பட்ட போது தகரங்கள்தான் உடைந்தது என கூறினார் அப்படியானவருடைய கட்சிதான் தேசிய காங்கிரஸ் மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.