Dec 19, 2017

சாய்ந்தமருது சுயேற்சைக் குழுவின் வேட்பாளர்கள் பட்டியல் இதோ!



எம்.வை.அமீர் 

சாய்ந்தமருது நவம்பர் எழுச்சியின் பின்னரான சாய்ந்தமருது பிரகடணத்தின் பிரகாரம்சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சாய்ந்தமருதில் உள்ள 17 கிராம நிலதாரி பிரிவுகளை உள்ளடக்கிய 06 வட்டாரங்களுக்குமான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு (2017.12.18 - திங்கட்கிழமை) சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மாஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவரும் இந்த சுயேற்சைக் குழுவின் தலைவருமான அல்ஹாஜ். வை.எம்.ஹனீபாவினால் அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் பின்வருவோர் நியமனப் பத்திரத்தில் பெயர் குறிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
@. 1,3 கிராம நிலதாரி பிரிவுகள்,வட்டாரம் - 18
ஜலீல் (ஜவாஹிர்)
தொழிலதிபர்.
டவுன் ரவல்ஸ் உரிமையாளர்.
@. 2,4,6 கிராம நிலதாரி பிரிவுகள்,வட்டாரம் - 19
முஹர்ரம் பஸ்மீர்
தொழிலதிபர்
@. 5,7,9 கிராம நிலதாரி பிரிவுகள்,வட்டாரம் - 20
முகம்மது அஸீம்
தொழிலதிபர்
மெகா சேல் நிறுவன உரிமையாளர்.
@. 8,10,12 கிராம நிலதாரி பிரிவுகள்,வட்டாரம் - 21
ஆயிஷா சித்தீக்கா சட்டத்தரணி
@. 11,13,15 கிராம நிலதாரி பிரிவுகள்,வட்டாரம் - 22
அப்துல் றபீக்
நில அளவையாளர்
@. 14,16,17 கிராம நிலதாரி பிரிவுகள்,வட்டாரம் - 23
சகோ. அப்துல் அஸீஸ்
ஆங்கில ஆசிரியர்
மேற்படி வேட்பாளர்களுக்கு மேலதிகமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஏனைய ஊர்களான கல்முனைக்குடிகல்முனை நகரம்இஸ்லாமபாத்மருதமுனைநட்பிட்டிமுனை அடங்கலான சகல பிரதேசங்ளுக்குமாக எஞ்சிய 17 வட்டாரங்களுக்கும் வேட்பாளர்களை நியமனம் செய்யும் இறுதிக்கட்ட நியமனப் பத்திர தயாரிப்பு நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படுமென எதிபார்க்கப்படுகின்றது.


Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post