Dec 14, 2017

சாய்ந்தமருது எழுச்சியும் சுயேட்சையும் ஸீரோவாகி விடுமா?சாய்ந்தமருது பிரதேசசபை போராட்டம் உக்கிரமடைந்த போது எல்லா கட்சி சார்பான எல்லா மார்க்க அமைப்புசார்பானவர்களும் அனைத்தையும் ஒரு பக்கம் ஒதிக்கி விட்டு போராட்டத்தில் குதித்து இன்று வரை போராடிக்கொண்டும் முயற்ச்சி செய்து கொண்டுமே இருக்கிறார்கள் இதில் எந்த உள் நோக்கமும் இல்லைஒரே ஒருகுறிக்கோள் சபை எடுக்க வேண்டும் என்பதே

ஆனால்....... 

சாய்ந்தமருது மக்களின் உணர்வில் தனது சில்லறை விளையாட்டை விளையாடி அஞ்சிக்கும் பத்துக்கும் அங்கும்இங்கும் அலையும் முகவர் அரசியல் ஒருவரின் கைப்பிடிக்குள் சிக்கவைக்க பள்ளிவாசல் துணைபோவதுஆபத்தானது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரியின் சகோதரர் டட்லி  தனது பக்கற்றுக்குள் இருக்கிறார் என்றும்அவரிடம் கைக்கூலியாக சில ஆயிரங்களை பெற்றுக்கொண்டு அரசியல் செய்து இந்த மக்களின்  ஆர்வத்தைஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் திரண்டு நிற்கிற பக்கம் நிண்டு தலைகாட்டிக்கொண்டு இவரை விட்டால் போராடயாரும் இல்லை என்கிற அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தனது பொக்கட்டை நிரப்பும் நபர் பற்றிஅவதானமாக இருங்கள்

அழகி ஹிருனிக்கா தனது கழிசனுக்குள் இருக்கிறார் என்று அவருடன் அலைந்து வெறும் 25000 தொகைக்கு மக்களைகாட்டி கொடுத்தவர் யார் என்பதை அறியுங்கள்.

ஊர் முழுவதும் கூடி சாய்ந்தமருது மக்கள் பள்ளிவாசலின் அழைப்பிற்கு  செவி சாய்த்து வந்தார்களே தவிர இவரின்கூக்குரலுக்கும் அழைப்பிற்கும் மக்கள் அணிதிரளவில்லை என்பதனை அனைவரும் அறியுங்கள் 

எம்மோடு உணர்வோடு வந்து கலந்தவர்கள் முஸ்லிம்காங்கிரஸின் இளைஞர் போராளிகள் அகில இலங்கை மக்கள்காங்கிரசின் கூசாக்கள் மாத்திரம் அல்ல என்பதை பள்ளிவாசல் அறியுங்கள்

இவரின் கடந்த கால வரலாறுகள் மக்களின் உணர்வினை காசாக்கிய செயல்பாடே எப்போதும் இருந்து வருகிறது.ஒவ்வொரு முறையும் மக்கள் ஆர்ப்பாட்டம் மக்கள் எழுச்சி என்று வருகிறபோது முன்னுக்கு நின்று அதன் முழுநன்மையினையும் காசாக்கிய துரோகி யார் என சரியாக அறியுங்கள் 

2015 இல் பாராளுமன்ற தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வெறும் 100000 பணத்திற்றுக்குபோலின் பூத் திறந்தவர் யார் என அறியுங்கள்

இன்று வரைக்கும்  ஊழல் அமைச்சர் ரிசாதுடன் இணைந்திருந்து மணித்தியாலங்கள் தோறும் எமது பள்ளியில்நடப்பதை அப்டேட்  கொண்டிருக்கும் கயவர் யார் என அறியுங்கள் 

அவ்வாறான லங்கா அசோக் லேயலண்ட் கடையின் முகவரை பள்ளிவாசல் வேட்ப்பாளராக களமிறக்குவது என்னநியாயம் என அறியுங்கள் 

இன்றுவரைக்கும் மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது இளைஞர் அமைப்பாளர் பதவியில் இருந்துகொண்டு இந்தபோராட்டத்தை மலினப்படுத்துபவர் யார் என அறியுங்கள்.

மக்கள்க காங்கிரஸ் கட்சி அரசியலுக்குள் முழுமையாக இணைத்துக்கொண்டு போலிப்படம் காட்டும் துரோகி யார் எனஅறியுங்கள்

இவ்வாறான வேட்ப்பாளர்களை பள்ளிவாசல் போடட்டும் அதன் பிறகு நாம் களத்தில் இறங்கலாம் என எதிரிகள்வாய்ப்பு பார்த்து கொண்டிருக்கிறனர்இதற்கு இடமளிக்க முடியுமா என அறியுங்கள்.

கட்சி சார்ந்து வேட்ப்பாளர் போடுவதென்றால் அப்பாவி மக்களை பலி கொடுக்கவா பள்ளிவாசல் சாய்ந்தமருது மக்கள்அனைவரையும் வீதிக்கு அழைத்தது என அறியுங்கள் 

இந்த போராட்டம் தோற்றால் எமது சாய்ந்தமருது மக்கள் தோற்றதற்கு சமன் அந்த தோல்வி எமது பிள்ளையின்பிள்ளைக்கும் இந்த தோல்வியின் வடு சென்றடையும்.   

இது உண்மைக்குண்மையான போராட்டம் இதில் அரசியல் கழிசறைகளுக்கு எந்த இடமும் வழங்கப்படக்கூடாதுஅவர்கள் அனைவரும் ஒதுக்கப்படவேண்டியவர்கள் என அறியுங்கள்.

கட்சி சார்ந்து வேட்டப்பாளர் போட்டால் கலவரமே வெடிக்கும் என்பதை அறியுங்கள்

கட்சி அரசியல் முகவர்கள் வந்தால் பள்ளிவாசல் தரப்பினர் நீங்கள் ஓட்டமெடுக்க வேண்டி வரும் என்பதையும் சிதறிசின்னாபின்னப்பட்டு போவீர்கள் என்பதை அறியுங்கள்.

போராட்டத்தில் முகம் காட்டி நின்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமானால் இந்த போராட்டம் ஒருசுயநலனுக்காக உருவாக்கியது என்ற அர்த்தம் கொடுப்படும் எதிர்காலத்தில் இவ்வாறான முயற்சிக்கு   நல்லவர்கள்மதிப்புள்ளவர்கள் படித்த இளைஞர்கள் முன்வரவே மாட்டார்கள் இவ்வாறான சோரம்போன சக்திகளுக்கு பின்னல்மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பதை அறியுங்கள்.

பல வருடங்களாக தாகித்திருக்கின்ற நகர சபை என்கின்ற உணர்வினால் ஊர் மக்கள் ஒன்றுபட்டதும் சுயேட்சைக்குவாக்களிக்க மக்கள் தயாரானதும் பெரியதொரு எதிர்பார்ப்புடனாகும்ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் வேட்பாளர்கள்யார் என்றால் நமது பள்ளிவாசல் தலைவர் போன்று சுயநலமற்ற முதிர்ச்சி அனுபவமுள்ள ஒழுக்கம்பண்புள்ளநம்பிக்கையான உலமாக்கள்புத்திஜீவிகள்ஊர்ப்பிரமுகர்களைத்தான்வென்று மறு நிமிடம் பதவியை துச்சமெனமதித்தித்து அவசியமேற்படுகின்ற போது  ராஜினாமா செய்கின்ற அப்பழுக்கற்றவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.  

தற்போது சுயேச்சை வேட்பாளர்களாக முண்டியடிப்பவர்கள் யார்காலத்திற்கு காலம் அரசியல்வாதிகளின்கைக்கூலிகளாக இருந்து கொண்டு பணம் உழைப்பவர்களும் வெளிநாடுகளில் கொள்ளையடித்து தப்பி வந்தவர்களும்காடையர்களும் வட்டிமோசடி என்று பணம் உழைப்பவர்களும்தான் 5000 ரூபா கட்டி விண்ணப்பித்துள்ளனர் என்றால்நல்லவர்களுக்கு எங்கே இடம் கிடைக்கபோகுதுஅதனால் நல்லவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை.அப்படியென்றால் இந்த பண முதலைகளும் சண்டியர்களும்தான் நமது சுயேச்சை வேட்பாளர்களா?   

இவர்களுக்கு மக்கள் வோட்டுப் போடுவார்கள் என்று பள்ளிவாசல் எப்படி எதிர்பார்க்க முடியும்எந்த முகத்துடன்மக்களிடம் பள்ளிவாசல் வோட்டு கேட்டு போகும்கட்சிகள் மிகவும் இலகுவாக வெற்றி வாகை சூடும் என்பதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

போராட்டத்தில் முன்னின்றார் என்பதற்காக அவருக்கு சன்மானம் வழங்க வேண்டுமென்றால் வேறு எதையாவதுகொடுப்போம்அதற்கு சுயேச்சை சரிவராதுஅவர் அதற்காகத்தான் நின்றார் என்றால் அதைச் சொல்லித்தான்வேட்பாளர் நியமனம் கேட்கின்றார் என்றால் இதை விட சுயநலமும் துரோகமும் வேறு என்னவாக இறுக்கப்போகிறதுஅவசறமாக சிந்தியுங்கள்

உட்பூசலுக்கு வழி சமைக்காமல் ஊரின் நன்மதிப்புள்ள பொது வேட்பாளர்களை தேடி எடுங்கள்அவர்கள்சண்டியர்களுடன் போரிட்டு டிக்கட் கேட்டு உங்களிடம் வர மாட்டார்கள்நீங்கள்தான் இனம் கண்டு அழைத்து வரவேண்டும்அவர்கள் களத்திற்கு வராமல் வீட்டுக்குள் இருந்தாலும் நமது சுயேச்சை இன்ஸா அல்லாஹ் நிச்சயம்அமோக வெற்றியீட்டும்.

அரசியல்வாதியாக்களின் எடுபிடிகளுக்கும் சாய்ந்தமருதில் ரிஷாத் பதியுதீனின் லங்கா அசோக் லேலண்ட் கடையைநடத்துபவருக்கும் பண முதலைகளுக்கும் வாய்ப்பு கொடுப்பட்டால் படுதோல்விதான் நிச்சயம்.

முஹம்மத் அன்ஸார்
சாய்ந்தமருது

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network