அரசாங்கத்திற்கு அடுத்த சவால்!!!தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். இவர்கள் நாளைய தினம் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்பவர்கள் குறித்து முறைமை ஒன்றினை ஏற்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமை மற்றும் தொடர்ந்தும் உறுதி மொழிகள் மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிப்பதில் அரசாங்கம் சவாலினை எதிர்நோக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...