Dec 21, 2017

பத்தரமுல்லை வாழும் பாத்திமாவின் சோகச் சம்பவம்;அவரது கடை இரவோடு இரவாக உடைப்பு


FILE IMAGE
இந்த நல்லாட்சியிலும் அதுவும் தற்போதைய ஜனாதிபதி யின் தலைமையில் உள்ள ஆட்சியிலும் இன்னும் முஸ்லீம்களுக்கான அநீதிகள் குரோதங்கள் அரசியல் வாதிகளாளே முன்னெடுக்கப்படுகின்றன.

(அஷ்ரப் ஏ சமத்)
பத்தரமுல்லை சந்தியின் ”சிக்னல்” சைகை லாம்பு அருகே 60 வருடங்களுக்கு மேலாக 2 பரம்பரைத் தலைமுறையில் வாழ்ந்து வரும் பாத்திமா தமது சகோதரிகள் குழந்தைகளுடன் தமது  வாழ்க்கையை ஓட்டிக் கொள்ள ஒரு சிறிய   பெட்டிக் கடை ஒன்றை நடாத்திவருகின்றாள். அக்கடைக்கு” பாத்திமா ஸ்டோாஸ்” என பெயரிட்டுள்ளாா். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்   நகர அபிவிருத்திஅதிகார சபையின் பிழையான ஒரு தகவலின்படியும்    ஒரு அரசியல்வாதிக்கு அதனை நிவா்த்திசெய்து கொடுப்பதற்கும்  ஏழை- பாத்திமாவின்  கடை பொருட்களுடன்   இரவோடு இரவாக  உடைத்து நொறுக்கப்பட்டது.  இவ்வாறான தொரு சம்பவம் இந்த நல்லாட்சியில்  அதுவும் சிறுபாண்மையினா் வாக்களித்து தெரிவு செய்த இந்த  நாட்டின் ஜனாதிபதியின் கீழ் உள்ள  ஸ்ரீ.ல.சு.கட்சியின் அரசியல் வாதியின் இனக்குரோத செயலை இச் சம்பவம்  வெளிக்கொணா்கின்றது. அரசியல் வாதிகள் தமது  அரசியல் பலத்தை பாவித்து  சொத்துக்கள் வாங்குவதற்கு தடையாக இருக்கும் பாத்திமாவின் சிறிய பெட்டிக்கடை இரையாகி உள்ளது. 

பாதிமாவின்    கண்ணீா்க் கதை - 

பாத்திமாவின் தந்தையின் தந்தை இற்றைக்கு 60 வருடங்களுக்கு முன்  முதன் முதலாக பேருவளையில் இருந்து வந்து செத்சிரிபாய கட்டடித்திற்கு அருகில்  பத்தரமுல்லைச் சந்தியில்  ஒரு சிறிய வெற்றிலைக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து  வந்துள்ளாா். அதன் பின்பாத்திமாவின் தந்தை 50 வருடகாலமாக இக்கடையை நடத்தி வந்து  25 ருபாவுக்கு வாடகை செலுத்தி வந்துள்ளா். அதன் பின் அவா் கடை வைத்திருந்த இடத்தினை  அவா்  பணம் செலுத்தி   நீதிமன்ற தீா்ப்பின் படியும்  5 பேர்ச் கொண்ட சிறு காணியுடன் அந்தப் பெட்டிக்கடையும் நீதிமன்றத்தில்  உரிமையும் வழங்கப்பட்டது.    . அவா் காலம் சென்றதும் அவரது இரண்டு மகளும்  அக்கடையை கடந்த 30 வருடகாலமாக தொடா்ந்தும் நடாத்தி வருகின்றனா்.

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியிலும் சில இனவாதிகள்  இக் கடையில் பாத்திமா வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது பாத்திமாவுக்கு கண்ணத்தில்  கல் அடித்து கண்ணம் வெடித்து அவா் ஒரு மாதம் வைத்தியசாலையில் இருந்துள்ளாா்.  இச் செய்தி அப்போது  என்னாள்   ஊடகங்களில் படத்துடன் வெளியிட்டிருந்தேன். இவ் விடயமாக  த
லங்கம பொலிசாரில் கல் அடித்தவரை அடையாளம் காணப்படவில்லை.  எவ்வித நடவடிக்கையோ நிவாரணமோ பாத்திமாவுக்கு கிடைக்கவில்லை. 


கடந்த மாதம் நவம்பா் 11 ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபையின்  பாரிய புல்டோசா் இயந்திரத்துடன்   வந்து  மிண்இணைப்பினையும்  மின்சார சபைக்கு அறிவித்து  துண்டித்த பின்னா்    சட்டவிரோத கட்டிடம் என பாத்திமாவின் கடை   உடைக்கப்பட்டது. பாத்திமாவும் அவளது தங்கையும் நடு வீதியில் செய்தறியாவது கதறிக் கதறி அழுதார்கள் அவ் விடத்தில் உள்ள சக பௌத்த  வியாபாரிகள் பொது மக்களும்  வேடிக்கையே பாா்த்துக் கொண்டிருந்தனா்.  


 எவ்வித அறிவித்தலுமின்றி இதனை யாா் செய்தாா்கள். என அவளுக்கு தெரியவில்லை.  ஒரு அரச நிறுவனம் சட்ட விரோத கட்டிடம் என்றால்  14 நாட்களுக்கு மூன்று  முறை கடிதங்கள் அனுப்பல் வேண்டும். முடியாவிட்டால் நீதிமன்றம் ஊடாக  வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தவின்படியே பொலிசாா் அனுமதியுடன் பிஸ்கால் உதபியுடன் நீதிமன்ற அதிகாரிகள் ஊடகவே இவ்வாறு   உடைக்க முடியும்.   அவ்வாறு எவ்வித அறிவித்தலும் அவளுக்கு எழுத்து மூலம் கிடைக்கவில்லை.

இக் கட்டித்ததை உடைப்பதற்கு ஒரு புல்டோசா் மெசின் ஓட்டுணர் மட்டுமே  வந்தே  இக் கட்டிடத்தை உடைத்தாா்.  அவா் யாா்? எங்கு வந்தது யாா்உத்தரவிட்டது? என அவா்களுக்கு தெரியவில்லை.  - அடுத்த ஒரு இரு நாட்களுக்குள் மிகுதியை உடைப்பதாகச் சொல்லி சென்று விட்டனா்.  

ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு  ஒரு காணித் தரகா் ஒருவா்  பாத்திமாவிடம் வந்து   இக் கடையை விட்டு எழும்புங்கள் இதற்காக  50 இலட்சம் ருபா  பணம் தருவதாகவும்  உறுதிப்பத்திரத்தை கையொப்பமிடுமாறும்  சொல்லிச் சென்றாா்.. அதனை அவா்கள் மறுத்து இது பரம்பரையாக நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் எங்களுக்கு பிறகு எங்கள் குழந்தைகள் இதனை நடாத்துவாா்கள். நாங்கள் ஏழை இதனை வாழ்க்கையை நடாத்தவதற்கு சிறு கடையை வைத்துக் கொண்டு இவ்விடத்தில் உள்ளோம். என சொல்லியிருக்கின்றாள் பாத்திமா 

  பாத்திமாவின்  கணியில் இரு மருங்கிலும் இரண்டு தனியாா்ருடைய வெற்றுக்  காணிகள் உள்ளன. இதனை வாங்குவதற்கு ஒரு அரசியல் வா்தி முற்படுவதாகவும் அதுக்கு பாத்திமாவின் 5 பேர்ச் காணி இடையில் உள்ளதாகவும் இதனையும் வாங்குவதற்கே  அவா் முயற்சித்தே ஒரு தரகரை அனுப்பியதாகவும் பாத்திமாவுக்கு அறியக் கிடைத்தது.   

  . இவ்விடயங்களை தன்னிடம் சொல்லி அழுதாா். நான் இவ்விடயமாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தெறிந்த வா்களிடம் விசாாித்தும் காரணம் புரியவில்லை.அதன் பின்னா் கொழும்பு பாராளுமன்ற உறுப்பிணர் முஜிபு ரஹ்மானுக்கு தொலைபேசியில் இவ் விடயத்தினை எத்தி வைத்தேன் அவா் உடன் செயற்பட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு பாத்திமாவை செத்சிரிபாய நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு தான் வருவதாகவும்  பாத்திமாவையும் அங்கு வரும்படி சொல்லியிருந்தாா்.   அங்கு இவ்விடயத்துக்கு பொறுப்பான சட்ட அதிகாரியைஅவா் நாடி இவ் விடயம் பற்றி கேட்டறிந்தாா். அந்தஅதிகாரி கடுவளை முன்னாள் மாநகர சபையின் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முதல்வராக இருந்த  புத்ததாசவின் மகன் மேல் மாகாண சபை உறுப்பிணா் மஞ்சு புத்ததாசவே இதற்குப்பின்னால் இருந்துள்ளாா். பாத்திமா ஸ்டோஸூக்கு அருகில் இரு காணிகளையும் வாங்குவதற்கும் இதற்கு இடையில் பாத்திமா ஸ்டோஸ் தடையாக இருப்பதையும் நகர அபிவிருத்திஅதிகார சபையின் அதிகாரிக்கு வேண்டுமென்றே சட்ட விரோத கட்டிடம் என ஒரு மனுவை கையளித்து இதனை செய்துள்ளதாக இறுதியில் முஜிபு ரஹ்மானிடம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயா் அதிகாரி தெரிவித்துள்ளாா். மிகுதியை உடைக்கமாட்டோம் எனவும் பாராளுமன்ற உறுப்பிணா்  அந்த அதிகாரி அறிவித்திருந்தாா்.

 இந்த நல்லாட்சியிலும் அதுவும் தற்போதைய ஜனாதிபதி யின் தலைமையில் உள்ள ஆட்சியில் இன்னும் முஸ்லீம்களுக்கான அநீதிகள் குரோதங்கள் அரசியல் வாதிகளாளே முன்எடுக்கப்படுகின்றன. இன்று வரை உடைந்த வீட்டில் மின்சாரம் இல்லாமல் மிஞ்சிய பொருட்களை வைத்துக் கொண்டு பாத்திமா  மீண்டும் அத்தொழிலையே செய்கின்றாள். தான் சிறுகச் சிறுகச் சோ்த்து பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வங்கியில் 5 இலட்சம் கடன்ஒன்றை பெற்றுத்தான் இந்த கடை அரையை நிர்மாணித்தேன். தனது தங்கை முதல் 4 சகோதரிகளும் இங்குதான் வாழ்ந்து பத்தரமுல்லை உள்ள சிங்கள மாகாவித்தியாலயத்திலே கல்வி கற்றோம். தற்போது எங்களது பிள்ளைகள் கூட பத்தரமுல்லையில் தான் கல்வி கற்கின்றனா். 60 வருடங்களாக பரம்பரையாக வாழ்ந்து வந்தோம். பத்தரமுல்லையில் சொந்தமாக ஒரே ஒரு முஸ்லீம் கடை ஒன்று என்றால் இந்த பெட்டிக் கடை மட்டும்தான் இருந்து வந்தது. இவா்கள் இவ்வாறு எங்கள் மீதும் முஸ்லீம் பொருளாதாரத்தின் மீதும் ்பொறாமைப்பட்டாா்கள் என்றால் இந்த நாடு எவ்வாறு முன்னேற்றமடையும் . பத்தரமுல்லையில்   மூன்று பண்சலைகளின் பிரதான தேரா்கள் கூட  எங்களுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் சொன்னாா்கள். அவா்கள் பண்சலைக்கு தேவையான  கற்புரம் சிறிய திரிகள் மண்சட்டிகள், பாணைகள் எங்களிடமிருந்து தான் வாங்குவாா்கள்.    ,அத்துடன்  அவா்கள் பூஜைக்கு வரும் பௌத்தா்களிடம்  கூட பாத்திமா ஸ்டோஸில் பொருட்கள்   வாங்குங்கள் அங்கு நல்ல மலிவு  என்று சொல்லி அனுப்புவாா்கள்


இன்று(டிசம்பா் 20) திகதி   புதன்கிழமை இவ்விடயம் மாக அமைச்சா் பாட்டலி சம்பிக்கவிடம் ஒரு மனுவை கையளித்தோம்.  இவ்விடயத்தை கவணிக்கும் படி  அமைச்சா் ரவுப் ஹக்கீம் ஒரு கடித்தினை அமைச்சா் சம்பிக்கவுக்கு முகவரியிட்டு தந்தாா் அதனை எடுத்துக் கொண்டு  அமைச்சா் சம்பிக்கவை சந்தித்து  நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி  அரசியல் நோக்கம் கொண்டு   ஒரு  இனத்திற்காக செய்யும்  அட்டுழியங்களை பொருளாதாரங்களை எவ்வித அரச சட்ட நடவடிக்கையுமின்று செயற்பட்டதை அவரிடம் விளக்கமளித்தோம்  அவா் இவ்விடயம் சம்பந்தாக தனக்கு ஒன்றும் தெரியாது   அவா் நகர அபிருவிருத்தி அதிகாரிகளுக்கு  இதனை பரிசிலிக்குமாறு கட்டளை இடுகின்றேன். என பதிலளித்தாா்
. மிண்சாரத்தினை பெற வேண்டுமென்றால் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம்ஒரு கடிதம் வாங்கி வரும்படி மிண்சார சபையினா் கூறுகின்றனா். கடந்த ஒரு மாதமாக இருழில் வாழ்ந்து வருகின்றோம்.  என  பாத்திமா   தனது துண்பத்தினையும் கஸ்டத்தினையும் கண்னீர் மல்க   தண்னிடம் தெரவித்தாா்


Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post