கிந்தோட்டை சம்பவம் : பொலிஸ் மா அதிபரின் கருத்தில் உடன்பட முடியாது – சாகல


கிந்தோட்டை கலவரத்தின் போது பொலிஸார் அசமந்தமாக இருந்ததாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்த கருத்தில் உடன்படமுடியாது என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பொலிஸ் மா அதிபரின் கருத்தில் உடன்படமுடியாது எனவும் குறித்த அதிகாரிகள் அன்று தமது கடமையை சரியாக செய்ததன் காரணமாகவே பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.