ஈரான் அரசாங்கத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம்அமைதி வழியில் போராடும் மக்களை கைது செய்கின்றமை தொடர்பில் ஈரான் அரசாங்கத்திற்கு அமெரிக்கா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அந்த நாட்டு மக்கள் தமக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கோரியும், ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். குறித்த போராட்டங்கள் நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் குறித்த போராட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெறுகின்றன. இந்தநிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இதற்கு எதிராகவே அமெரிக்கா தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அராசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படை உரிமைகளை கோரி போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமைய உண்டு எனவும், கைது செய்யும் நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவிக்கப்பட்டுள்ளது.