புறக்கோட்டை கடை ஒன்றில் தீ


புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள நகை விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட குறித்த தீ விபத்தினை தீயணைப்பு படை அதிகாரிகளுடன் சேர்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மின்சார ஒழுக்கு காரணமாகவே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.