முடி வெட்டச் சென்ற நபரின் முதுகை வெட்டிய நாவிதர்!தலை முடியை வெட்டிக் கொள்வதற்காக சென்ற நபர் ஒருவரின் முதுகை நாவிதர் ஒருவர் வெட்டிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. புத்தளம் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் நகரில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையமென்றுக்கு, முடி வெட்டுவதற்காக சென்ற நபர் ஒருவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.

முடி வெட்டுவதற்காக அறவீடு செய்யப்பட்ட கட்டணம் அதிகம் என கூறிய நபருக்கும் நாவிதருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கத்தி குத்தில் நிறைவடைந்துள்ளது.
புத்தளம் - மன்னார் வீதி ரெட்பானா பகுதியில் வசித்து வந்த நபரே கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...