சீனாவின் மேற்பார்வையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலாவது கப்பல்ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகம் சீனாவிடம் குத்தகை அடிப்படையில் கையளிக்கப்பட்டமையை அடுத்து, பிரதான போக்குவரத்து கப்பல் நேற்று குறித்த துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

குறித்த கப்பல் 400 வாகனங்களுடன் பனாமாவில் இருந்து வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துறைமுகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கப்பலை கண்காணித்தல், கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன.