Dec 11, 2017

மஹிந்த அணி குறித்து எந்த அச்­சமும் கிடை­யாது - பிரதமர்முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அச்­சப்­ப­டலாம். ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு இந்த இரண்டு கட்­சிகள் தொடர்­பிலும் எவ்­வி­த­மான அச்­சமும் கிடை­யாது. ஆகவே மக்­க­ளிடம் சென்று தேசிய அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் உண்­மை­யான பங்­க­ளிப்பை கூறுங்கள். மக்­களின் ஆத­ரவு கிடைக்கும் என பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆலோ­சனை   வழங்­கி­யுள்ளார்.    

உத்­தேச உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் கட்­சியை எவ்­வாறு  ஒழுங்­க­மைப்­பது என்பது குறித்து சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பு ஒன்று  அலரி மாளி­கையில் அண்­மையில் நடை­பெற்­றது. அதன்போதே பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இந்த சந்­திப்­பின்­போது  தேர்­தலை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை  போட்­டி­யிடும் எதிர் தரப்­புகள் எவ்­வா­றான நிலை­மை­களில் உள்­ளனர் , அவர்கள் யார் என்­பது தொடர்பில் அறிய வேண்டி  இருந்­தது. ஆனால் இன்று அந்த தக­வல்கள் வெளி­வந்து விட்­டன. இனி ஐக்­கிய தேசிய கட்சி எவ்­வாறு மக்கள் மத்­தியில் செல்ல வேண்டும் என்­ப­தையே சிந்­திக்க வேண்டும் என பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார். 

வாழ்க்கை செலவு விவ­காரம் மக்கள் மத்­தியில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் உள்ள பொது­வான சவா­லாகும். மேலும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் இரண்டு முக்­கி­யஸ்­தர்கள் கட்சி தாவு­வ­தற்­கான பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் ஐக்­கிய தேசிய கட்­சியில் வாய்ப்பு அளிக்­கப்­ப­டாத இருவர் சுதந்­திர கட்­சியில் இணைந்­துக்­கொண்­டுள்­ள­தாக பிர­த­ம­ரிடம் இதன் போது தெரி­விக்­கப்­பட்­டது .

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை கண்டு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அச்­சப்­ப­டலாம். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு அந்த அச்­சப்­பாடு கடு­க­ளவும் இல்லை. தனி­ந­ப­ருக்­குள்ள குறிப்­பிட்­ட­ளவு வாக்கு வங்கி ஒரு போதும் அதி­க­ரிக்­காது. ஆகவே புதிய கூட்­ட­ணிகள் எவ்­வி­த­மான சவா­லையும் எமக்கு ஏற்­ப­டுத்­தாது என பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார். 

இது இவ்­வாறு இருக்க  கிராம மட்­டத்­தி­லான கூட்­டங்கள் மற்றும் வீடு வீடாக சென்று மக்­களை சந்­தித்தல் உள்­ளிட்ட பல்­வேறு பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க ஐக்­கிய தேசிய கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. 

அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என அனைத்து தரப்­பு­களும் அனைத்து உள்­ளு­ராட்­சி­மன்­றங்­க­ளிலும் கட்­சியின் வெற்­றிக்­காக செயற்­பட வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அறி­வித்­துள்ளார். அதே போன்று மாவட்­டத்­திற்கு ஒன்று அல்­லது இரண்டு கூட்­டங்­களில் பிர­தமர் கலந்­துக்­கொள்ள உள்ளார். 

நாட­ளா­விய ரீதியில் இடம்­பெ­ற­வுள்ள உள்­ளு­ராட்­சி­மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 8 ஆயிரம் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளது. பங்காளி கட்சிகளுடனான இணக்கப்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் உட்சாகமாக தேர்தலில் போட்டியிட முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network