Dec 11, 2017

சுதந்திர கட்சி மூன்று சின்னங்களில் தேர்தலில் போட்டி


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை, வெற்றிலை மற்றும் இன்னுமொரு சின்னம் உள்ளிட்ட மூன்று சின்னங்களில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, ஆகிய மாவட்டங்களில் கை சின்னத்திலும் மேலும் சில மாவட்டங்களில் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலும் சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிறு கட்சிகளுடன் இனைந்து தகுதியான சின்னம் ஒன்றுடன் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post