அரச வங்கியொன்றில் ஆயுத முனையில் கொள்ளை


தங்காலை பொலிஸ் பிரிவின் குடாவெல்ல, நாகுலுகம பிரதேச அரச வங்கியொன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆயுதங்களுடன் வந்த கொள்ளைக்காரர்கள் இருவர் குறித்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான வாடிக்கையாளர் ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.