கத்தார் எல்லையை மூடிய, சவுதி அரேபியாதீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறி கத்தார் நாட்டின் நிலவழி எல்லைப் பகுதியை சவுதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது.

தீவிரவாதத்திற்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் துண்டித்தன.

இதன் விளைவாக கத்தார் நாட்டின் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் கத்தார் உடனான நிலப்புற எல்லைப் பகுதியை, சவுதி அரேபியா இரண்டு வாரங்கள் மூடியது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை கத்தாரின் எல்லைப் பகுதியான சால்வாவை, சவுதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது. இந்த தகவலை சவுதியின் சுங்க வரித்துறை நிர்வாகம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...