பெண் உரிமை காத்த இஸ்லாம்!
ஜாஹிலிய்யாவின் சில நல்ல பண்புகள் போக ஏனைய எந்தப் பண்பாடுகளையும் இஸ்லாம் ஆதிரிக்கவில்லை.

முஹம்மத் நபி ஸல் அவர்கள் மக்காவில் நபியாக அறிமுகமான காலத்தில் மக்காவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத மக்களிடம் பெண்கள் தொடர்பாக பாரிய கலாச்சார பண்பாட்டு வீழ்ச்சி காணப்பட்டது .

பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல்.பெண்களை அடித்து உதைத்தல்.
அடிமைகள்போன்று சுதந்திரமற்றவர்களாக நடத்துதல். அவர்களைப்
போகப் பொருளாக, சமூகத்தின் சாபக்கேடாகக் கருதுதல் நிர்வாணமாக்கி நடனமாடுதல்,கற்பழித்தல் .

கணவன் மரணித்தால் இரண்டு வருடங்கள் சொந்த தேவைகளுக்காக் கூட வீட்டை விட்டும் வெளியேற விடாது தனித்த ஒரு குடிசையில் அடக்கி தடுப்புக்காவல் செய்து வதைத்தல் ( உடன்கட்டை ஏறுதல் போன்றது)
போன்ற பல உரிமை மீறல்கள் அட்டூழியங்கள் பெண்கள் பெயரில் அரங்கேற்றப்பட்டன பெண்கள் நடை பிணங்களாக மாற்றப்பட்டனர் .
இஸ்லாத்தில் பெண்களுக்கு என்ன தரப்பட்டுள்ளது?

பதில்
1) பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பது மிகப் பெரும் பாவம். மரணத்தின் பின் எழுப்பட்டு அல்லாஹ்வின் நீதி மன்றில் நீதி வழங்கப்படும் என்ற நற்செய்தி .

2) பெண் மக்களை ஒழுக்கம் பண்பாடு ஊட்டி வளர்த்தால் சுவனத்தில் நபி ஸல் அவர்களோடு கூடவே இருக்கும் நற்பாக்கியம் .

3)சொத்தில் பங்கு .

4) பெண்களை மணம் முடிப்போர் மஹர் என்ற திருமணக் கொடை வழங்கியே திருமணம் செய்ய வேண்டும்.

5)அவளுக்கு வாழ வீடும், உடுத்த உடையும், குழந்தை வளர்ப்புச் செலவும் தரவேண்டும்.

6) இஸ்லாமிய அமைப்பில் தொழில் செய்யலாம்.

7) பெற்றோர் சொத்தில் அவளது மணக் கொடையில் கணவன் தலையிட முடியாது.

8) ஐங்காலத் தொழுகைகளை பள்ளியில் நிறைவேற்றலாம் . ஆனால் வீடே சிறந்தது.

9) கணவன் வீட்டில் பெண்ணே பொறுப்பாளி

இன்னும் பல…

இஸ்லாம் கற்றுத்தரும் ஒழுங்குகள்

1) சுன்னத்தான நோன்பு நோற்க கணவனின் உத்தரவு அவசியம்.

2) மஹ்ரம் திருமணம் முடிக்க விலக்கப்பட்டவர்) துணை இன்றி ஒரு நாள் தூரத்துக்கு அப்பால் செல்ல அனுமதி இல்லை.

3) பள்ளிகளில் தொழுகையில் கலந்து கொள்ள வருவதை விட வீடே சிறந்தது
இவ்வாறான உயர் பண்பாடுகளைப் போதித்த மார்க்கத்தில் இருந்து கொண்டு
தேர்தலில் கலந்து கொள்ளும் பெண்களே அன்னை ஆயிஷா ரழி அவர்கள் இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் ரழி அவர்கள் மரணித்த பின்னால் தனது அன்புக்குரிய நபி ஸல் அவர்களுக்கு அருகாமையில் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் அது தனது வீடாக இருந்தும் அங்கிருந்து வெளியேறி அதற்கு அண்மையில் வேறு ஒரு இடத்தில் மதீனாவில் குடி இருந்த வரலாறு உங்கள் காதுகளை எட்டவில்லையா ?

அன்னை ஆயிஷா ரழி அவர்கள் ஸிஃப்பீன் போரின் போது தனது உடன் பிறந்த சகோதரர் அப்துர் ரஹ்மான் என்பவரோடு இரு குழுக்களை சமரசம் செய்யச் சென்றதை உங்கள் நலனுக்காக தேர்தல் ஆதாரமாகப் பார்க்கும் நீங்கள் எந்த கோஷ்டிகளுக்கு மத்தியில் சமரஸம் செய்ய வெளிக் கிளம்பி விட்டீர்கள் நீங்கள் வீடுகளில் தங்கி இருங்கள் என்ற குர்ஆன் வசனம் உங்களுக்குத்தானே இறங்கியது !

நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்த்தது பற்றி மறுமை நாளில் விசாரணை செய்யப்படுவீர்களா ? அல்லது தேர்தலில் ஏன் கலந்தீர்கள்? கலந்து கொள்ளவில்லை என்பதாகவா விசாரிக்கப்படுவீர்களா?
உங்களுக்கு கொஞ்சமாவது வெட்க உணர்வு இருப்பின் நீங்கள் இந்தப் போதனைகளைப் பற்றி சிந்தனை செய்து பாருங்கள்!

நீங்கள் இதை மறுத்தால் நீங்கள் போகும் வழி எது? என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?

(அபூ நமா)

M.J.M ரிஸ்வான் மதனி M.A.(Cey)