யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் இருப்பதையே அறியாத ஜனாதிபதிஎப்படி   இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து தரப்போகிறார் என பானதுறைபிரதேச சபையின் தலைவர் இபாஸ் நபுஹான் வெளியிட்டுள்ள ஊடக   அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..

யாழ்பாணத்தில் தேசிய மீலாதுன் நபி விழா நிகழ்வு இடம்பெற்றிருந்தது.வழமையாக ஜனாதிபதிபிரதமர் போன்ற முக்கிய புள்ளிகள் கலந்துகொள்வதுவழமைஇம்முறை இந் நிகழ்வுக்கு ஜனாதியை அழைக்க பெரும் முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளனஇருந்த போதிலும்அந்த முயற்சிகள் யாருக்குமேவெற்றியளிக்கவில்லைஇலங்கை முஸ்லிம்களை பல விடயங்களில்புறக்கணித்து வரும் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன இவ்விடயத்திலும்முஸ்லிம்களை புறக்கணித்துள்ளார்கிந்தோட்டை சம்பவம் தொடர்பில் இதுவரைவாய் திறக்கவில்லை என்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.

இவர் இந் நிகழ்வை புறக்கணித்தது தொடர்பில் பல விடயங்கள் நம்பத்தகுந்த ஊடகங்களில் வெளிப்பட்டுள்ளனஅதில் பிரதானமானதுயாழ்ப்பாணத்தில்முஸ்லிம்கள் அதிகம் உள்ளார்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரியாதாம்.முஸ்லிம்கள் இல்லாத இடத்தில் ஒரு நிகழ்வை நடத்தும் போது அங்கு மக்களைஎதிர்பார்க்க முடியாதல்லவாஇது சாதாரணமான ஒன்றல்லஅன்று விடுதலைப்புலிகள் இலட்சக் கணக்கான முஸ்லிம்களை வெளியேற்றியிருந்தனர் என்பதுவரலாறுஇது சாதாரணமாகவே அனைவருக்கும் தெரியும்இதுவே தெரியாமல்இருப்பதானது எமது வரலாற்றை நையாண்டிக்குட்படுத்துவது போன்றாகும்.இலங்கை நாட்டில் யாழ்ப்பாணத்தில் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள்உள்ளார்கள் என்பது தெரியாதவர்ஒரு ஜனாதிபதியாக இருக்க தகுதியற்றவர்.

இப்படியான ஒருவரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஆதரித்துஜனாதிபதியாக்கியமைக்கு வெட்கப்பட வேண்டும்இதனைப் போன்ற தவறு வேறுஏதுமில்லைகடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ மீது வெறுப்புற்று படு குழியில் வீழ்ந்துள்ளனர்.

Share The News

Post A Comment: