(அகமட் எஸ். முகைடீன்)

உள்ளுராட்சி மன்ற தேர்தல் 2018இல் கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (21) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் துசித பி. வனிகசிங்கவிடம் சமர்ப்பித்தார். 

குறித்த வேட்பு மனுவை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் முன்றலில் விஷேட தூஆப் பிரார்த்தனை நடைபெற்றது. இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் கட்சிப்போராளிகள் மிகுந்த ஆர்வத்துடனும் உணர்வு பூர்வமாகவும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 9 கட்சிகளும் 6 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தன. இவற்றில் 2 சுயேற்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கல் நிராகரிக்கப்பட்டன.

Share The News

Post A Comment: