பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன் அலுவலக முறைமைஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் 

பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் முகமாக ஏறாவூர் நகர சபையினால் முன் அலுவலக முறைமை (Front-office system) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த முன் அலுவலக முறைமை மூலம் பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளையும், மிக நீண்ட காலமாக   தீர்க்கப்படாமல் இருக்கின்ற விடயங்கள் மற்றும் தேவைகளை இந்த சேவையினுடாக பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதில் யாரும் தயங்கவேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.