ஹசன் அலி தயார்! ஹக்கீம் தயாரா? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

ஹசன் அலி தயார்! ஹக்கீம் தயாரா?

Share This


முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆளையார் நாயகம் நாவநீதம் பிள்ளை அவர்கள்  இலங்கை வந்த போது இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்  சம்பந்தமான அறிக்கை ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி அவர்கள்  நவநீதம் பிள்ளையிடம் கொடுத்தார் அது இலங்கை வரலாற்றில் எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் தன் சமுதாயத்துக்கு செய்யாத சேவை அதை மக்கள் மறக்காமல் இன்றும் ஹசன் அலி அவர்களுக்கு  நன்றி கூறுகின்றனர் 

நாவநீதம் பிள்ளையிடம் கொடுத்த அறிக்கை  அரசாங்கத்தை தினரவைத்தது அதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அமைச்சரவை கூட்டத்தில் ஹக்கிம் நவநீதம் பிள்ளையிடம் யார் அறிக்கை கொடுத்தது என்று கேட்ட போது சமுதாயத்துக்காக துணிந்து பேச முடியாமல் சேர் எனக்கு தெரியாது செயலாளர் ஹசன் அலி அவர்கள் தான் கொடுத்துள்ளார் என்று ஹசன் அலி அவர்களை காட்டிக் கொடுத்தார் இந்த துரோகதனத்தை  எதிர்கால சமுதாயமும் மறக்காது இப்படியானவரை தலைவராக சிலர் ஏற்றுக் கொண்டு இருப்பது ஏன் என்பது தான்  புரியாத புதிராக உள்ளது ?

அன்று ஹசன் அலியை காட்டிக் கொடுத்து மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் மூடக்கினார் ஹக்கிம் அதனால் தனது சமுதாயத்துக்கு சேவை செய்ய முடியாத கவலையோடு பாராளுமன்ற காலத்தை மிகவும் கவலையுடன் அவதானமாக நகர்த்தி சென்றுள்ளார் இதை அறியாதவர்கள் ஹசன் அலி அவர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்தார் என்று கேக்கின்றனர் உண்மை தான் 

ஆனால் ஹசன் அலி அவர்கள் இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினையை மிகவும் துணிவுடன் உலகறிய செய்துள்ளார் #இதை #விட #சேவையா? என்பதை சிந்தித்து பாருங்கள் 

ஹசன் அலிக்கு ஆப்பு அடிக்க வேண்டும் என்பது ஹக்கிமின் நீண்ட கால திட்டம் காரணம் சமுதாயத்தை  விலை பேசி ஹக்கிம் புரியும் அரசியல் வியாபாரம் ஹசன் அலிக்கு பிடிக்கவில்லை அது ஹக்கிமுக்கு பெரும் தலையிடியாக இருந்தது அதனால் அரசியலில் இருந்து ஹசன் அலியை விரட்ட நினைத்தார் அது முடியவில்லை இன்று அரசியலிருந்து ஹக்கிம் விரண்டு ஓடும் நிலையை ஹசன் அலி ஏற்படுத்தி விட்டார் அல்லாஹ் பெரியவன்

 அல்லாஹ்வின் உதவியால் அமைச்சர் றிசாத் அவர்களின் ஒத்துழைப்புடன் மறைந்த  தலைவர் அஸ்ரப் அவர்களின் இலட்ச்சிய பாதையில்  சமுதாயத்தை பாதுகாக்க ஹசன் அலி அவர்கள் தயார் ஹக்கிம் சமுதாயத்தை பாதுகாக்க தயாரா ? என்று பார்த்தால் அவர் தயார் இல்லை என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் அவர் டயஸ்போராவின் ஆலோசனைப்படி முஸ்லிம் சமுதாயத்தை வழி நடத்தி வட கிழக்கை இனைக்க  மறைமுகமாக  திட்டங்களை நிறைவேற்ற காலதாமதமாகலாம் 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாகுவதற்கு ஒரு பிரதான நபராக இருந்தவர் ஹசன் அலி அவர்கள் என்பது நாம் அறிந்த விடயம் அவர் தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு பிறகு தனது கட்சி ஒரு ஏமாற்றுவாதியிடம் மாட்டிக்கொண்டதை கால போக்கில் அறிந்து கொண்டு மிகவும் அமைதி போராட்டத்தில் ஏமாற்றுவாதியை விரட்ட அவரும் முயற்சி செய்தார் ஆனால் ஹக்கிம் அவர்களுக்கு பக்க பலனாக பதவி பணத்துக்கு ஆசைப்பட்ட கிழக்கு பிசாசுகள் இருந்ததால் ஏமாற்றுவாதியை விரட்ட ஹசன் அலி அவர்களுக்கு  முடியவில்லை அதனால் ஏமாற்றம் அடைந்த ஹசன் அலி அவர்கள் தலைவர் அஸ்ரப் அவர்களின் சிந்தனையற்ற நிர்வாகத்தில் குடியிருந்து சமுதாயத்துக்கு ஏதுவும் செய்ய முடியாது ஹக்கிம் சமுதாயத்தை அழித்து விடுவார் அதிலிருந்து சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கோடு கட்சியை விட்டு வெளியேறி தனது தலைவர் பாதையில் அரசியல் செய்ய முன் வந்த போது அவரின் பார்வைக்கு அவரது தலைவரின் அரசியல் அமைச்சர் றிசாத் அவர்கள் தலைமை தாங்கும்  அகில இலங்கை  மக்கள் காங்கிரஸில் மட்டுமே இருப்பதை கண்டு கொண்ட ஹசன் அலி அவர்கள்  சமுதாயத்துக்காக அமைச்சர் றிசாத் அவர்களோடு அரசியலில் இனைந்து தலைவர் அஸ்ரப் அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற இனைந்து  இருப்பது வரவேற்கதக்க  விடயம் அதற்கு மக்களின் ஆதரவும் பெருகி வருகிறது அதனால் இனிமேல் தேர்தல்களில் ஹக்கிம் அவர்களுக்கு முகம் கொடுக்க முடியாத இக்கட்டான நிலை தோன்றியுள்ளது அதுவும் ஹக்கிமை வாழ வைத்துக்கொண்டு  இருக்கும் அம்பாறை மாவட்டத்தில் அன்று  முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த மக்கள் ஆதரவு இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மாறிவிட்டது அதனால் அம்பாறையில் அமைச்சர் றிசாத் அலை வீசுவதால் எதிர் வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் படு தோல்வியடைவது உறுதியாகி விட்டது  அதனால் அந்த கட்சியில் போட்டியிட்ட வேற்பாளார்கள் தயக்கம் கொண்ட நிலையில் வேற்புமனுதாக்கல்  செய்தாலும் மனைவி குடும்பத்தின் எதிர்ப்பால் அவர்கள் தேர்தலுக்கு முதல் தேர்தலில் இருந்து ஒதுங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது  

ஜெமீல் அகமட்

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE