சம்மாந்துறை மாவடிப்பள்ளி குரூஸ் நீர்த்தேக்க கால்வாய் அருகாமையில் ஆண் சடலம் மீட்புபாறுக் ஷிஹான்

சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி குரூஸ் நீர்த்தேக்க கால்வாய்  அருகாமையில்  இருந்து இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று இன்று (8) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த சடலம்  மீட்கப்பட்டு இன்னும் அதே இடத்தில் நீண்ட நேரம் வெயிலில் கருவாடாகவும் மக்களின் கண்காட்சி பொருளாகவும் மாறி வருகின்றது.

சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.