ஏமனின் முன்னாள் ஜனாதிபதி கொலைஏமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலா (Ali Abdullah Saleh) கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சனாவில் வைத்து அவர் கொல்லப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக இவர் பயணம் செய்த சிற்றூர்தியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

எனினும் அதனை உறுதிசெய்ய முடியாதிருந்தது. இந்த நிலையில் யோமன் அதிகாரிகள் தற்போது அதனை உறுதி செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.