Dec 15, 2017

நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றம் செல்லலாம்.!


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் மீள் பரிசீலனைக்காக கோரிக்கை முன்வைக்க  சகல உரிமையும் உள்ளன.
 நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் உரிய தொகுதிகளில் தேர்தல் பிற்போகவும் வாய்ப்புகள் உள்ளதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார். 
எனினும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஏகமனதான ஒத்துழைப்பு உள்ளதனால் தேர்தலில் எந்த சிக்கலும் வராது எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 
(ஆர்.யசி)

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network