Dec 12, 2017

இரத்தினபுரி முஸ்லிம்களுக்கு!
எமது வர்த்தகம் சிறிது சிறிதாக அன்னியர் கையில் போய்விட்டது என்பதை என்னால் மறுக்க முடியாது இன்று மற்றைய சமூகம் வர்த்தகத்தை விஸ்தரிப்பது மற்றுமன்றி கல்வியிலும் வெகு தூரம் போய் விட்டார்கள் எமது சமூகத்தின் கல்வியின் நிலை என்ன??? சிந்திப்போம் செயல்படுவோம். 

இலங்கை முஸ்லிம் கிட்டத்தட்ட 1300 வருடங்களில் எத்தனை புத்திஜீவிகலை ஒருவாக்கியுள்ளோம் ? விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே இது மாபெரும் வெட்கம் வர்த்தகத்தையும் பறி கொடுத்து கல்வியிலும் பிந்தங்கியுள்ள நாம் எமது எதிர்கால் சந்ததியினருக்கு விட்டுச்செல்வது என்ன??? சிந்தியுங்கள் எதிர்காலத்தில் கூலிவேலை செய்வதற்கு  கூட கல்வி அவசியம் ஆகும். 

இன்று இலங்கையில் முஸ்லிம்கள் 8% சதவீதத்திற்கு கூடுதலாய் உள்ளோம் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாம் கலாசாலை செல்லும் எண்ணிக்கை 5% கூட இல்லை எண்பதை உணர்வோமா? எமது சராசரி அளவையாவது எட்ட முயற்சிக்க வில்லையே என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். 

செல்வந்தர்கலும் புத்திஜீவிகலும் அரசியல் வாதிகளும் இரத்தினபுரி  முஸ்லிம் அதிகாரிகளும் பேதங்கலை மறந்து ஒன்று சேர்ந்து ஒரு தனி இலக்காக எமது சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டிய தருனம் இது.


இரத்தினபுரியில் சல்சபீல் மற்றும் ருவன்புர ஹெல்பின் பண்டேஷன் போன்ற சமூக நல அமைப்புக்கள் உள்ளன இவர்களின் உதவியுடன் சமூக முக்கியஸ்தர்கள் கலந்து ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். செல்வந்தர்கள் இவர்களுக்கு உதவ முன்வருவதன் மூலம் சமூக மாற்றங்கல் எற்படுத்த முடியும்


முதலாவது எமது இரத்தினபுரியில் முஸ்லிம் பாலர் பாடசாலை ஒன்றினை உருவாக்க முயல்வது மிக முக்கியமான விடயம் ஏன் என்றால் இரத்தினபுரியில் முஸ்லிம் மாணவர்கள் மட்டும் பயிலும் பாலர் பாடசலை இல்லை அல் அக்‌ஷா எனும் முஸ்லிம் பெயரில் இயங்கும் பாலர் பாடசாலை தலைமை ஆசிரியர் முஸ்லிம் அல்லாத ஒரு ஆசிரியை அது மட்டும் அன்றி அதில் அன்னிய பிள்ளைகலும் உள்ளன. 

நான் சொல்வது பயிற்றப்பட்ட இஸ்லமிய பாலர் பாடசாலை ஆசிரியர் அனைத்து பிள்ளைகலும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் ஏன் என்றால் பிள்ளிகலுக்கு முதலில் மார்க்க ஒழுக்கம் சின்ன வயதில் கொடுக்கப்பட வேண்டும் அன்னிய பிள்ளைகலுடன் சிறுவயதில் கற்கும் போது அவர்களின் சில பண்புகள் இஸ்லமிய பிள்ளைகலை சென்றடையும் இதனை நான் ஒரு ஆசிரியர் என்றவகையில் கண்டுள்ளேன் அதே போன்று அன்னிய ஆசிரியர்கள் கற்பிக்கும் போது அவர்களின் மார்க்கம் பிள்ளைகளை சென்றடையும் ஒரு முஸ்லிம் ஆசிரியர் கற்பிக்கும் போது உதாரணம் A for Allah என இஸ்லமிய முறையில் கற்பிக்கலாம்.

 இன்று சில முஸ்லிம் பாடசாலைகளில் அன்னிய பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதால் சில இஸ்லமிய ஒழுக்கத்தில் பிரச்சினை வருவதை காணலாம் உதாரணம் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் போது வாழ்த்து சொல்லும் போது ஆண் பெண் கை கொடுத்தல், ஆண் பெண் பிள்ளைகல் ஒரே தட்டில் சப்பிடல் , ஆண் மாணவர்கள் நின்ற நிலையில் வெளி வாசல் செல்லல் ஆண் பெண் அருகே கதைத்துக்கொள்ளல் என சொல்லிக்கொண்டே போகலாம்


அதே போன்று இரத்தினபுரியில் பெற்றோர்கள் தங்கல் பிள்ளைகளை குறைந்தது 18 வயது வரை கல்வியினை கற்பிக்க முன்வர வேண்டும் இங்கு கா பொ த சா/த பரீட்சை முடிந்தவுடன் ஆண் பிள்ளைகளை மானிக்க வியாபரியாகவும் பெண்பிள்ளைகளை குடும்ப தலைவியாக மாற்றும் செயற்படுகல் மாத்திரம் இடம் பெருவது கவலை அழிக்கிறது. 

அதனால் தான் இன்று என் இரத்தினபுரி சமூகத்தில் போதை வஸ்து மற்றும் பாலியல் பிரச்சினை மேலோங்கி இருபதை அவதானிக்க முடிகிறது. கட்டாயம் பெற்றோர்கல் பிள்ளைகளை பட்டதரிகள் மெளலவி மார்கள் போன்ரோர்களாக மாற்ற முயலுங்கல்


எம் நுஸ்ஸாக்
இரத்தினபுரி
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post