அதாஉல்லாவை வீழ்த்த வெளிநாட்டிலிந்து நிதி வருகிறது; சபீஸ் தகவல்!
நேற்று இருசகோதரர்கள் முதல்வர் பதவி தொடர்பாக அழுகிப்போன அசிங்கமான குரிச்சிவாதம் பற்றி முகநூலிலே பேசிக்கொண்டார்கள்.
உங்களுக்கு முதலில் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்,
அதாஉல்லா என்றொரு தலைமையையும் என்னையும் பிரிக்கும் ஒரேஒரு சந்தர்ப்பம் எதுவென்றால் அது எங்கள் இருவரில் ஒருவரின் மரணமாக மாத்திரமே இருக்கும்.
பதவியை கேட்பவனுக்கு கொடுக்ககூடாது எனபதனையும் அவ்வாறு பதவி கேட்டால் இஸ்லாத்துக்கு எதிராக நான் இயங்குகிறேன் எனும் தெளிவான கோட்பாட்டில் ஊடையவன் நான்.
எனக்கு கிடைத்த பதவிகள் அனைத்தும் இறைவனால் எனக்கு கிடைத்தவையே அன்றி நானாக கேட்டது கிடையாது.
அதாஉல்லா என்பது எதையும் இஹ்லாசாக சிந்திக்கின்றவர் எமதூரின் சொத்து, எமக்கான முகவரியை தேடித்தந்தவர், ஏன் எம்மிடமிருந்து பதவிகளுக்காக பிரிந்து சென்றவர்கள்கூட அதாஉல்லா இனி அக்கரைபற்றுக்கு ஒன்றுமே செய்யத்தேவையில்லை அவரை நாங்கள் கண்ணாடிப்பெட்டியில் வைத்து பாதுகாகப்போகிறோம் என்று கூறியதும் உங்களுக்கு தெரியும்.
அப்படிப்பட்ட தலைமையை வீழ்த்துவதற்கு வெளிநாட்டு சதிகாரர்களே நிதியுதவி அழிக்கும் இந்நிலையில்.
மக்களின் எண்ணங்களில் விசக்கிரிமியை தூவுவதுபோன்று குறிச்சிவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளமை உங்களின் பின்னால் உள்ள அசிங்கமான அரசியல்வாதிகளை முன்கொண்டுவந்து நிறுத்துகிறது, இவர்கள்தான எமதூரை வெளியூர்களில் அசிங்கமாக காட்சிப்படுத்தியது.
இக்காலத்தில் மக்கி மருகிபோன குறிச்சிவாதங்களை நமதூரில் தோற்றுவித்தவர்கள் இன்று காடேறிப்போய் விட்டார்கள் அவர்களின் பட்டறையில் தீட்டப்பட்டவர்கள் தமது வங்குரோத்து அரசியலுக்காக இன்னமும் வாதங்களை தூண்டிவிட நினைப்பது ஜாஹிலியாகாலத்துக்கு உங்களை மீண்டும் அழைதுச்செல்வதுபோன்றாகும். 
அதாஉல்லா என்றொரு தலைமையின் கீழ் புடம்போடப்பட்ட எவரும் இவ்வாறான அசிங்கம்பிடித்த வாதங்களுக்கு பின்னால் செல்லமாட்டார்கள்.

SM சபீஸ் இன் பேஸ்புக் பதிவு