தலதா மாளிகைக்கு சொந்தமான காணியில் புதையல் அகழ்வு


தலதா மாளிகைக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலதா மாளிகைக்கு சொந்தமான கலேவெல வஹகோட்டே பகுதியில் உள்ள காணியொன்றிலேயே பல மாதங்களாக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
தம்புள்ளை, பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுவொன்றினாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெக்கோ இயந்திரம், மோட்டார் சைக்கிள், கல்லை துளையிடும் கருவி மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.