சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை தேசியத்துக்கு எடுத்துக்காட்ட இது சிறந்த தேர்தல்எம்.வை.அமீர்-

சாய்ந்தமருதுக்கு தனியானதொரு உள்ளுராட்சிசபை என்ற கோஷம் போராட்டமாக வலுப்பெற்று கடையடைப்பு, வீதிமறியல் மற்றும் மக்கள் பிரகடனம் என பல்வேறுபட்ட வடிவங்களில் எங்களின் வேண்டுகோளை தேசியத்துக்கு பறைசாட்டிக்கொண்டு இருக்கும் இந்த தருவாயில் எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலையும் தங்களது கோரிக்கைக்கு மேலும் வலுவூட்டும் விதத்தில் மக்கள் ஆணையை தேசியத்துக்கு எடுத்துக் கூறும் மக்களின் ஆணையாகவே தாங்கள் கருதுவதாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் அனுசரணையுடன் சுயட்சையாக களமிறங்கியுள்ள தொழிலதிபர் எம்.வை. ஜௌபர் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலை தான் போட்டியிடும் 20 வட்டாரத்தில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் தேர்தலுக்கான வியூகங்களை திட்டமிடுவது தொடர்பாகவும் 20 வட்டாரத்திலுள்ள 8 பிரிவு வாக்காளர்களின் கருத்துக்களை அறியும் மக்கள் சந்திப்பு 2017-12-29 ஆம் திகதி 8 பிரிவில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் தில்சாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருதின் மூன்று தசாப்த கால கோரிக்கையான தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத்தருமாறு தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரூடாக உரிய கட்சித் தலைவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் பலவழிகளிலும் முயச்சிகள் முன்னெடுக்கப்பட்டும்  நம்பிக்கையூட்டும் போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு, துரோகமிளைக்கப்பட்டு ஒரு துர்ப்பாக்கியகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும். இந்நிலையில் தங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாது, இவ்வூரின் பொதுமக்கள் வீதிக்கு வந்து மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் விதமாக கட்சித்தலைவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பான அமைச்சர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுந்த பதிலை இதுவரை வழங்காததன் காரணமாக சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைமையின் கீழ் உலமாக்களும், வர்த்தக சமூகமும்,அனைத்து சிவில், இளைஞர் அமைப்புக்களும், பொதுமக்களும் ஒருமித்த குரலில் சாய்ந்தமருதுக்கான பிரகடனத்தை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.

போலியான வாக்குறுதிகளுக்கு இனியும் ஏமாறப்போவதில்லை என்று தெரிவித்த தொழிலதிபர் எம்.வை. ஜௌபர், ஒன்று திரண்டுள்ள சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை தேசியத்துக்கு எடுத்துக்காட்ட இது சிறந்த வழியென்றும் தெரிவித்தார். வெறும் கோஷங்களால் மட்டும் எதுவும் ஆகப்போவதில்லை என்று தெரிவித்த அவர், ஒட்டுமொத்த வாக்குகளை சுயட்சைக்கு வழங்குவதனூடாக மட்டுமே தங்களது இலக்கை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை பாதுகாப்புப்படையினரின் துணையுடன் அடக்க முயட்சிகள் எடுக்கப்படலாம் என்று தெரிவித்த அவர், பொறுமையாக ஜனநாயக ரீதியில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் 8 பிரிவுக்கான 20 பேர்கொண்ட தேர்தல் குழு தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கடமைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

பிரதேசத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் ஒற்றுமையாக வாக்களிக்கவேண்டியதன் அவசியம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை தேசியத்துக்கு எடுத்துக்காட்ட இது சிறந்த தேர்தல்  சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை தேசியத்துக்கு எடுத்துக்காட்ட இது சிறந்த தேர்தல் Reviewed by NEWS on December 30, 2017 Rating: 5