ஒரு வருடத்துக்கான கேள்வி மனுவை பொதுமக்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.ஏறாவூர் ஏ.ஜி.முஹம்மட் இர்பான் - 

ஏறாவூர் நகர சபைக்கு கீழுள்ள ஏறாவூர் தெற்குப் பொதுச் சந்தைக் கடைத்தொகுதியின் கடைகளுக்கான திறந்த கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் இன்று (19) தெரிவித்தார்.

இதற்கான கேள்வி மனுக்கள் இன்றிலிருந்து கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பப் படிவங்களை ஏறாவூர் நகர சபையில் பெற்றுக்கொண்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 2017.12.27 ஆம் திகதி நன்பகல் 12.00 மணிக்கு முன்னர் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது 2018.01.01 தொடக்கம் 2018.12.31 ஆம் திகதி வரையான ஒரு வருடத்துக்கான கேள்வி அறிவித்தல் எனவும் இறுதித்தினமான அன்றைய தினம் 3.00 மணிக்கு கேள்வி மனுக்கள் யாவும் திறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.