ஒலுவில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற முகம்மது இப்றாகிம் மாயம்!
ஒலுவில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர், இன்று வியாழக்கிழமை (07) அதிகாலை காணாமல் போயுள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதேசத்தில் மீன் பிடிக்கச் சென்ற போது குறித்த படகு கவிழந்ததில், ஒலுவில் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த அபுசாலி முகம்மது இப்றாகிம் (வயது-33)  என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மீனவரைத் தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.