அட்டாளைச்சேனையில் இஸ்லாமிய பாடசாலை நடாத்தும் சிங்கள பௌத்த பெண்!அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இயங்கும் சுஹாரா இஸ்லாமிய சர்வதேச பாடசாலையை பௌத்த மதத்தை சேர்ந்த குசும் எனும் ஆசிரியை கடந்த 7வருடங்களுக்கும் மேலாக நடாத்திவருகிறார்.

உண்மையில் இதுதான் இன ஐக்கியம், இங்கு பணிபுரியும் ஆசிரியைகள் அனைவரும் முஸ்லிம்கள் - மாணவர்களும் முஸ்லிம்கள், இவர் கணவரின் இழப்பிற்கு பிறகு தான் முன்னின்று முஸ்லிம் மாணவர்களின் கல்வியை முன்னேற்ற பாடுபடுவதாக குறிப்பிட்டார்.

நாட்டில் எங்கோ இனவாதம் துாண்டப்பட்டாலும இப்படியான நல்ல மனிதர்கள் மூலம் ஐக்கியம் - சமாதானம் வளர்ந்தால் போதும்.