வன்னியில் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது.

மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது கட்டுப்பணங்களை செலுத்தியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிப்பிராந்திய அமைப்பாளரும் ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதியுமான கெளரவ மஸ்தான் பா.உ அவர்களின் தலைமையில் வந்த கட்சியின் பெருந்தொகை ஆதரவாளர்களால் இன்று மன்னார் மாவட்ட செயலகம் நிறைந்து வழிந்தது.

பலத்த பாதுகாப்புடன் வருகை தந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் அவர்களுக்கு வழிநெடுகிலும் சூழ்ந்து நின்ற ஆதரவாளர்களால் அளிக்கப்பட்ட பலத்த வரவேற்புடன் மாவட்ட செயலாளரிடம் தனது கட்சிக்கான கட்டுப்பனத்தை செலுத்தினார் இன் நிகழ்வில் ஜனாதிபதியின் பிரித்தியோகச் செயலாளர் சேனக்க அபே குனேசேகரவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.