ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிக்க முடிவுஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அங்கீகரிப்பதற்காக விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தபப்படவுள்ளது.

இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியாக நிர்வகிக்கும் உடன்பாட்டுக்கு அமைய, துறைமுகம் சீன நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அனுமதிப்பதற்காக எதிர்வரும் 8 ஆம் திகதி இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரைக்கும் விவாதம் நடத்தப்பட உள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.