டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினது விளக்கமறியல் நீடிப்பு.! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினது விளக்கமறியல் நீடிப்பு.!

Share This


11 இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமற்போதலுடன் தொடர்புபட்டாரென்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினதும் விளக்கமறியல் எதிர் வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சி.ஐ.டி விசாரணைகளின்போது வெலிசரவில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தில் வைத்து முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கைது செய்யப்பட்டார். 
மேற்படி இளைஞர்கள் 2008 மற்றும் 2009 ஆகிய காலப்பகுதியில் தெஹிவளை, பத்தரமுல்லை மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE